Dindigul | கமகம கறிவிருந்து போட்ட வாகன உரிமையாளர்கள்.. கருப்பணசாமி கோயிலில் மக்கள் கொண்டாட்டம்
Dindigul | கமகம கறிவிருந்து போட்ட வாகன உரிமையாளர்கள்.. கருப்பணசாமி கோயிலில் மக்கள் கொண்டாட்டம்
திண்டுக்கல்லில் எந்த வித விபத்துகளும் ஏற்படாமல் இருக்க வாகன உரிமையாளர்கள் கிடா வெட்டி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கணவாய் கருப்பணசாமி கோவிலில் டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் 20 ஆண்டுகளாக, தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும், லாபகரமாகவும் இயங்க வேண்டி 20 க்கும் மேற்பட்ட கிடாய்கள், 100 க்கும் மேற்பட்ட கோழிகளை வெட்டி பூஜை மேற்க்கொண்டனர். பின்னர், கோழிக்கறி வறுவல், கமகமக்கும் கிடா கறி குழம்புடன் பொதுமக்களுக்கு கறி விருந்து வழங்கினர். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்