பேரழிவின் உச்சம்.. கலங்க வைக்கும் ட்ரோன் காட்சி

Update: 2024-12-03 08:58 GMT

கடலூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்க காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் சூழ்ந்து நிற்கும் வெள்ள நீர் அதன் கழுகு பார்வை காட்சி.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலையில் பெய்த மழையினால் சாத்தனூர் அணையில் இருந்து சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்டதால் கடலூர் முகத்துவார பகுதியான தாழங்கூட அருகே உள்ள கண்டகாடு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்துள்ள மணிலா, கத்தரி, தென்னை, வாழை, கீரை வகைகள், தேக்கு, பொங்கலுக்கு பயிர் செய்த பன்னீர் கரும்புகள் உள்ளிட்ட விவசாயிகள் பயிர் செய்துள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெள்ளநீர் புகுந்து பாழாகி உள்ளது அதன் கழுகு பார்வை காட்சிகள்...

Tags:    

மேலும் செய்திகள்