CM Stalin | Actor Jaishankar | "CM செய்த மிகப்பெரிய கௌரவம்.." | நடிகர் ஜெய்சங்கரின் மகன் நெகிழ்ச்சி
"ஜெய்சங்கர் சாலை" பெயர் பலகை திறப்பு - நன்றி தெரிவித்த மகன்
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என பெயர் சூட்டப்பட்ட பலகையை காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அவருக்கு நடிகர் ஜெய்சங்கரின் மகன் நன்றி தெரிவித்துள்ளார்..மக்கள் கலைஞர், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் 1964 முதல் 2000ம் ஆண்டு வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்..இந்நிலையில் அவரது மகனின் கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவின் பேரில் நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என பெயரிடப்பட்டுள்ளது..