"மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்" - சரவெடியாய் வெடிக்கும் செங்கோட்டையன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ,எம்ஜிஆர் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கையோடு பணத்தை எடுத்துக்கொண்டு ரிக்சா ஓட்டியவர்களுக்கு உதவி செய்ய புறப்பட்டவர் என்றும், அவரைப்போல இன்று கட்சி ஆரம்பித்தவர்கள் தன்னை நினைத்து மனக்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் 2026 இல் திமுக கூட்டணி சுக்கு நூறாக உடையும் எனவும் விமர்சித்தார்.