திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மாலை 6 மணிக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தகுதியான வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.