அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் படி இதுவரை 3,800 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும் 8,300 க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்