கண் முன் ஓடி வந்த கருப்பு உருவம்... பெண்ணுக்கு நேர்ந்த கதி... பதற வைக்கும் வீடியோ
கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் சமீப காலமாக காட்டுப் பன்றிகள் வீதிகளில் சகஜமாக நடமாடி வருகின்றன. இந்நிலையில் மேப்பாடி பகுதியில் மூன்று காட்டுப் பன்றிகள் கடைவீதி பகுதியில் வேகமாக ஓடின. இதைக்கண்டு பயந்த கூட்டுறவு விற்பனை அங்காடி ஊழியரான ரஷியா, காட்டுப்பன்றிகள் கடைக்குள் வராமல் இருக்க கதவை மூட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார். இதன் சிசிடிவி காட்சி பரவி வருகிறது.