Theft Viral Video | பெரும் திருடர்களையே அலறவிடும் `சில்லறை திருடன்’ - அப்படியே படம்பிடித்த சிசிடிவி
பெங்களூருவில், பத்மஸ்ரீ விருது வென்ற ரிக்கி கேஜின் வீட்டில் இருந்து, சம்ப் இரும்பு மூடி திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருட்டுக்கு பயன்படுத்திய வாகன பதிவு எண்ணை வைத்து பெங்களூரு நீலசந்திரா பகுதியை சேர்ந்த 19 வயதாகும் சிவகுமார் என்ற இளைஞர் உட்பட இருவரை கைது செய்தனர். டெலிவரி பாய் வேடத்தில் வந்து திருடிய நிலையில், திருடப்பட்ட இரும்பு மூடியை 700 ரூபாய்க்கு விற்றது தெரியவந்தது.