Accident | Kerala | பைக்கில் நேருக்கு நேர் மோதி பறந்து விழுந்த இருவர்.. பதறவைக்கும் CCTV காட்சி..
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இருவர் படுகாயம்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையில் காரை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
பிளத்தற சாலையில் நடந்த இந்த விபத்தில், இரண்டு இருசக்கர வாகனங்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவற்றில் வந்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.