Car Accident || கோர விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார் - பறிபோன 4 உயிர்கள்.. அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியில் கனரக வாகனம் மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பண்டி பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து நடைபெற்றது. நால்வர் உயிரிழந்த நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.