கேரள மாநிலம் பாலக்காட்டு அருகே முன்னூர் தோணி பகுதியில் சாலையோரம் கார் தீப்பிடித்து எரிந்த நிலையில்,
அருகில் சென்று பார்த்த போது காரினுள் ஒருவர் கருகிய நிலையில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் வேலிய காடு பகுதியைச் சேர்ந்த கார் என்பது தெரிய வந்தது. மேலும் கார் நீண்ட நேரமாக அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததால், காரில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்