Kerala | Snake | காருக்குள் பாம்பு கடித்தது தெரியாமல் ஓட்டி சென்ற நபர்.. கடைக்கு சென்றதும் அதிர்ச்சி
காருக்குள் பாம்பு கடித்தது கூட தெரியாமல் ஓட்டி சென்ற நபர்.. மெக்கானிக் கடைக்கு சென்றதும் பேரதிர்ச்சி
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றாடிசுரத்தில் காரில் சென்று கொண்டு இருந்தபோது காருக்குள் வைத்து பாம்பு கடித்ததில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரை மெக்கானிக் கடையில் விட்டு சோதனை செய்தபோது காருக்குள் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பாம்பை பிடித்தனர்.