Kerala Politics | போதைப் பொருள் கடத்தல் வழக்கு - கேரளாவில் அதிரடியாக சட்டப்பேரவையில் இருந்து நீக்கம்

Update: 2026-01-06 03:10 GMT

கிரிமினல் வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆண்டனி ராஜு, கேரள சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கேரளா காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரான ஆண்டனி ராஜு, வழக்கறிஞராக இருந்தபோது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆதாரத்தை அழித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 36 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் இருந்து எம்எல்ஏ ஆண்டனி ராஜு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்