Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07.01.2026) | 6 AM Headlines | ThanthiTV
- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது... தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளனர்...
- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நடைபெறும் சந்தனக் கூடு நிகழ்வில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் செய்ய இயலாது... மலையின் அடிவாரத்தில் இருந்து உச்சி வரை எவ்வித விலங்குகளையும் பலியிடக் கூடாது என்றும், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது...
- ஈபிஎஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது... அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு நடந்துகொள்ளும் முதல்வர் ஸ்டாலின், அதிமுகவினர் மீதும் அவ்வாறே நடந்து கொள்கிறார் எனவும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்...
- பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 9 முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்... மொத்தம் 34 ஆயிரத்து 87 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்...
- பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து செல்வோர் ஓ.எம்.ஆர்., ஈசிஆரை பயன்படுத்த, அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்... போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழியை பயன்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்...
- அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது... 5 ஆயிரம் பேருக்கு மேல் கூடும் நிகழ்வுகளுக்குக் காவல்துறையின் அனுமதி அவசியம் என்றும், 50 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்கும் மாநாடுகளுக்கு 30 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது...