அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி, அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் கே.என். நேரு, ஆயிரத்து 20 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை, தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை தாக்கல் செய்த மனு,
விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.