TVK | JanaNayagan | விஜய் திரைப்பட பேனர் விவகாரம்.. தவெக நிர்வாகியை தாக்கியதாக புகார்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே விஜய் திரைப்பட பேனர் வைப்பது தொடர்பாக த.வெ.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி.துறிஞ்சிப்பட்டி பகுதியை சேர்ந்த த.வெ.க நிர்வாகி செல்வம் என்பவர்,
விஜய் திரைப்பட பேனரை திரையரங்கு முன்பு வைக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் உட்பட 15 பேர் கொண்ட கும்பல், பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செல்வம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.