சபரிமலை சன்னிதானத்தில் ஆதிய சிஷ்டம் நெய் விநியோகத்தில் 16 லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவசம் போர்டால் ஆதிய சிஷ்டம் நெய் 100 மில்லி லிட்டர் உறைகளில் விற்கப்படுகிறது. ஒவ்வொரு பாக்கெட்டும் தலா 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், இதில் 16 லட்ச ரூபாய் முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் நெய் நிரப்புவது முதல் விநியோகம் வரை அனைத்து நிலைகளிலும் துல்லியமான பதிவேடுகளைப் பராமரிக்கத் தவறியதால், இந்த முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சபரிமலையில் தங்க திருட்டு சர்ச்சையைத் தொடர்ந்து, தற்போது நெய் முறைகேடும் நடந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.