Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.01.2026) | 1PM Headlines | ThanthiTV
- இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அவதூறு பரப்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.... தமிழ்நாட்டில் கலவரம் செய்ய வேண்டும் என்ற ஒரு சிலரின் எண்ணம் நிறைவேறாது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்...
- வேறு வழியின்றி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்... அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்
- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது... அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் கவுன்ட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.... வைகுண்ட ஏகாதசி விழாவுக்காக 10 நாட்களாக இலவச தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை மறுதினம் முதல் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது...
- அவதூறு பரப்புவதாக ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....... மகளிர் ஆணையம் உத்தரவிட்டும், மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாய் கிரிசில்டா தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது...