PM Modi | Delhi | பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சேபகரமான முழக்கம்.. கிளம்பிய சர்ச்சை
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக போராட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து வழக்கு பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி கலவர வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷார்ஜில் இமாம் உள்ளிட்டோருக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக JNU வளாகத்தில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
SFI, AISA உள்ளிட்ட மாணவர் அமைப்புகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர், சபர்மதி ஆசிரமம் முன்பு போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபகரமான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மண்ணில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சவக்குழிகள் தோண்டப்படும் என்ற அவர்களது முழக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த முழக்கங்கள் வெட்கக்கேடானவை என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் டெல்லி காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.