Supreme Court | SabariMala | "கடவுளை கூட விட்டு வைக்கவில்லையா?" சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி
சபரிமலையில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் மாயமான விவகாரத்தில், "கடவுளை கூட விட்டு வைக்கவில்லையா?" என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் கே.பி. சங்கர் தாஸ் சதி செயலில் ஈடுப்பட்டதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சங்கர் தாஸ் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள உயர்நீதிமன்றம் கூறிய கருத்தை நீக்க மறுத்த நீதிபதிகள், திருட்டு தொடர்பான விவகாரத்தில் கடவுளை கூட விட்டு வைக்கவில்லையா? என வேதனை தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.