ராமநவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ ராமரின் பிறந்தநாளான இந்த புனிதமான நிகழ்வு, அனைவரின் வாழ்விலும் புதிய விழிப்புணர்வு மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார். வலுவான, வளமான மற்றும் திறமையான இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டிற்கு தொடர்ந்து புதிய சக்தியை வழங்கட்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.