ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Rahul Gandhi

Update: 2025-01-20 11:58 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என விமர்சித்த விவகாரத்தில், ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ராகுல் காந்தியின் மனுவுக்கு பதில் அளிக்க ஜார்க்கண்ட் அரசுக்கும், புகார்தாரர் நவீன் ஜாவுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், அமித் ஷாவை, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவின் தலைவராக இருப்பதாக, ராகுல் காந்தி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்