Kerala Trian Viral Video | ஆற்று பாலத்தின் நடுவே நின்ற ரயில் - வைரலாக பரவும் ரயில்வே ஊழியரின் வீடியோ

Update: 2025-07-15 14:46 GMT

ஆற்று பாலத்தில் நின்ற ரயிலின், பெட்டிகளுக்கு இடையே இறங்கி ரீசெட் செய்த ரயில்வே ஊழியரின் வீடியோ வேகமாக பரவி வருகிறது...

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்ற ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த நபர் ஒருவர், அவசர சங்கிலியை பிடித்து இழுத்ததால் ஆலுவா பெரியார் ரயில்வே பாலத்தில் ரயில் நின்றது. ரீசெட் செய்தால் மட்டுமே ரயிலை இயக்க முடியும் என்ற நிலையில், அங்கிருந்த ரயில்வே ஊழியர் இரண்டு பெட்டிகளுக்கு இடையே தண்டவாளத்தில் இறங்கி ரீசெட் செய்தார். ஆபத்தான இடத்தில் இறங்கி ரீசெட் செய்த ஊழியரின் வீடியோ வேகமாக பரவி வருகிறது..

Tags:    

மேலும் செய்திகள்