Kerala Elephant | பைக்கை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை - ஜஸ்ட் மிஸ்.. உயிர் தப்பிய திக் திக் காட்சி
கேரள மாநிலம் கண்ணூரில் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் சென்ற பைக்கை துரத்திய காட்டு யானையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கண்ணூர், ஆரளம் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய சாலையில் காட்டு யானை ஒன்று அவ்வழியாக பைக்கில் சென்றவர்களை திடீரென துரத்தியது. இதனால், பைக்கை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இனையத்தில் வைரலானது.