ஸ்கூட்டரில் இருந்த வைர மோதிரம் திருட்டு - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Update: 2025-07-22 01:50 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஸ்கூட்டரில் இருந்த வைர மோதிரத்தை திருடி சென்ற கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். லக்னோவை சேர்ந்த ஷானு என்பவர் சுமார் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரத்தை வாங்கிக் கொண்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். நடுவழியில் கடை ஒன்றில் வாகனத்தை நிறுத்திய நிலையில், பெண் உட்பட இருவர் ஸ்கூட்டரின் பெட்டியை உடைத்து அதில் இருந்த வைர மோதிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வழக்குபதிந்த போலீசார், சிசிடிவியில் சிக்கியவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்