Delhi Car Blast | டெல்லி பயங்கரம் - உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
டெல்லி கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன் தினம் (நவ.10)இரவு சுமார் 7 மணியளவில் கார் வெடித்ததில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் இரவு முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதோடு, மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்களும் தீவிர ஆய்வு நடத்தி தடயங்களை சேகரித்தனர்.
தொடர்ந்து, முதற்கட்ட தடயவியல் ஆய்வு அறிக்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லி கார் வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையான NIA-விடம் ஒப்படைத்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.