சென்னை பெண்ணை கரம் பிடித்தார் பெங்களூரு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா - நேரில் சென்று வாழ்த்திய அண்ணாமலை
பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா, சென்னையை சேர்ந்த பாடகி மற்றும் பரதநாட்டியக் கலைஞரான சிவஸ்ரீ ஸ்கந்தகுமாரை கரம்பிடித்தார். பெங்களூருவில் நடைபெற்ற இந்த திருமணத்தில், கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரம்மாண்டம் எதுவும் இன்றி, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர்.