Himachalpradesh செங்குத்தான மலைப்பகுதியிலிருந்து மடமடவென சரிந்த வாகனம் - உயிரை உறைய வைக்கும் காட்சி
இமாச்சலில் பின்னோக்கி நகர்ந்த வாகனம் - உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள்
இமாச்சலப்பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம், திடீரென செங்குத்தான சரிவில் பின்னோக்கி நகர்ந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரபல மலை வாசஸ்தலமான டல்ஹவுசியில் Dalhousie இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாகனம் நகரத் தொடங்கியபோது ஓட்டுநர் உள்ளே இல்லை என கூறப்படுகிறது. இதனால் வாகனத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு கீழே குதித்தனர். பின்னர் அந்த வாகனம் சாலையின் விளிம்பில் தொங்கிக் கொண்டு நின்றது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிகிறது.