நீண்ட நாட்களுக்கு பின் மனைவி ஷாலினி குறித்து மனம் திறந்து பேசிய அஜித்

Update: 2025-04-30 02:12 GMT

நீண்ட நாட்களுக்கு பின் மனைவி ஷாலினி குறித்து மனம் திறந்து பேசிய அஜித்

வாழ்க்கையை எளிதாக வாழ விரும்புவதாக பத்மபூஷண் விருது வென்ற நடிகரும் ரேஸருமான அஜித்குமார் மனம்திறந்துள்ளார்.

ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அஜித்குமார், தனது மிகப்பெரிய பலம் பெற்றோர், சகோதரர்கள், மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் எனக் கூறியுள்ளார்.

ஷாலினி தனக்கு தூணாக இருப்பதாகவும்,, பிரபலமான நடிகையாக இருந்த ஷாலினி, தனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளார் என்றும் அஜித்குமார் பேசியுள்ளார்.

தான் பல நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து இருக்கலாம் என்றும்,, தனது கடினமான காலங்களில் உறுதுணையாக நின்றவர் ஷாலினி என்றும் கூறியுள்ள அஜித்குமார்,

தன்னுடைய சாதனைகள் எல்லாம் தனது மனைவி ஷாலினியையே சேரும் என தெரிவித்து உள்ளார்.

தன் இதயத்திற்குள் தான் ஒரு மிடில் கிளாஸ்தான் என நெகிழ்ந்துள்ள அஜித்குமார்,,,, அனைத்து சூழலிலும் ரசிகர்களின் அளவற்ற அன்பு தன்னுடன் இருப்பதாக பேசியுள்ளார்.

தனக்கு அடைமொழியில் எந்த நம்பிக்கையும் இல்லை என்றும், தன்னை அஜித் அல்லது ஏ.கே என்று அழைப்பதையே விரும்புவதாகக் கூறியுள்ள அவர்,,

மற்ற பணிகள்போல் நடிப்பதும் ஒரு பணி.... நடிப்பதற்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

புகழ், செல்வம் நமது வேலையின் ஒரு பகுதி எனக் கூறியுள்ள அஜித்குமார்,,

நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களில் ஈடுபடுவதற்கு நண்பர்கள்தான் காரணம் என பேசியுள்ளார்.

தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், 33 வருடங்களாக வேலையை நேசித்து செய்துகொண்டிருக்கிறேன் என்றும், வாழ்க்கையை எளிதாகவே வாழ விரும்புகிறேன் என்றும் அஜித்குமார் சுவாரஸ்யமாகப் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்