மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-28 08:01 GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது...

வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள்...


ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு, தூத்துக்குடியில் கனிமொழியின் வேட்புமனுக்கள் ஏற்கபட்டன...

கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகனின் வேட்பு மனுக்கள் ஏற்பு...

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிப்பு...


சிதம்பரத்தில் விசிக வேட்பாளர் திருமாவளவனின் வேட்புமனு ஏற்கப்பட்டது...

தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியின் வேட்புமனுவும் ஏற்பு...


கோவையில் வேட்புமனு பரிசீலனையின் போது அதிமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம்...

மனுவில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக இரு தரப்பினரும் மாறிமாறி குற்றச்சாட்டு...


ராமநாதபுரம் தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பு மனு ஏற்பு...

சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மற்ற 5 பன்னீர்செல்வங்களின் மனுக்களும் ஏற்பு...

Tags:    

மேலும் செய்திகள்