வடகிழக்கு பருவமழை எப்போது? - தேதி குறித்த வானிலை ஆய்வு மையம்

Update: 2022-10-01 12:09 GMT

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டெம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 45 சதவிகிதம் அதிகமாக, அதாவது 477 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகி வருகிறது. இது வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு முழுவதுமாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்,

அதன் பின்னர் வானிலை நிலவரத்திற்கு ஏற்ப வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்