போட்ட 10 நாளில் இடிந்த கான்கிரீட்.. ஓனரின் அவசரத்தால் அவசரத்தால் தொழிலாளி பலி - 2 பேர் கவலைக்கிடம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, கடைக்காக புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் லாப்டின் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கத்தில், சுப்புராஜ் என்பவர் சாலை ஓரத்தில் கட்டப்பட்டு வரும் தனது கடைக்கு ஷட்டர் அமைப்பதற்காக கான்கிரீட் லாப்டின் அமைத்துள்ளார்.
கான்கிரீட் போடப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில், உரிமையாளரின் வற்புறுத்தலால் முட்டுக்களை வேலையாட்கள் பிரித்துள்ளனர்.
அப்போது, லாப்டின் சரிந்து விழுந்தது. இதில், 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பிரகலாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.