"இளவரசர் ஹாரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்றிருக்கிறார்" - தலிபான் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு

Update: 2023-01-09 05:46 GMT

இங்கிலாந்து இளவரசர் ஹாரி (Harry) , போர்ப் பயிற்சி என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்றதாக, தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இளவரசர் ஹாரி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் போர் பயிற்சியில் ஈடுபட்டபோது, 25 தீவிரவாதிகளை கொன்றதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இளவரசர் ஹாரி தாக்குதல் நடத்தியதாக கூறும் சம்பவத்தில் தலிபான்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், அந்த தாக்குதலில் அப்பாவி மக்கள்தான் உயிரிழந்த‌தாகவும் தலிபான் தலைவர் அனஸ் ஹக்கானி (Anas Haqqani) குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மேற்கத்திய அரசியல் தலைவர்கள், ஆப்கானிஸ்தான் மக்களை சதுரங்கக் காய்களாக பயன்படுத்தியதாகவும் தலிபான் விமர்சித்துள்ளது..

இது குறித்து அனஸ் ஹக்கானி கூறுகையில், "ஹாரி குறிப்பிட்ட தேதியில் தகவல்களை தேடி பார்த்தபோது தங்கள் அமைப்பினர் யாரும் இறக்கவில்லை என்றும் அதனால் அப்பாவி மக்களைதான் ஹாரி கொன்றிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்