வாழைப்பழங்கள் மீது தெளிக்கப்படும் விபரீத ஸ்பிரே - அதிர்ச்சி காட்சிகள்.. மக்களே உஷார்..!

Update: 2022-12-01 08:39 GMT

திறந்த வெளியில், வாழைப்பழங்கள் மீது ஸ்பிரே மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பழக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் ஒரு கடையில் வாழைப்பழங்களை பழுக்க வைப்பதற்காக ஸ்பிரே மூலம் ரசாயனம் தெளிக்கப்பட்டது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை திறந்த வெளியில் பழங்கள் மீது தெளிக்கும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்