குடிபோதையில் காரை ஓட்டி 3 பேர் பலியான வழக்கு... பெண் மருத்துவரை விடுவிக்க மறுப்பு

Update: 2022-08-05 11:11 GMT

குடிபோதையில் காரை ஓட்டி 3 பேர் பலியான வழக்கு... பெண் மருத்துவரை விடுவிக்க மறுப்பு


சென்னையை சேர்ந்த அன்புசூர்யா என்பவர் கடந்த 2013 நவம்பர் மாதம், இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, நள்ளிரவு 3 மணியளவில் மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்.


அந்த கார் மோதியதில் 2 மீன் வியாபாரிகள், 1 தலைமை காவலர் பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.


இது தொடர்பாக அன்புசூர்யா, காரில் பயணித்த அவரது மூத்த சகோதரி லட்சுமி, நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது சென்னை காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. காரை ஓட்டாமல், பயணம் மட்டுமே செய்த தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி லட்சுமி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது.


இந்த உத்தரவை மறு ஆய்வு செய்து தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்தில் ஓட்டுனருக்கு மட்டுமல்லாமல், அவருடன் பயணித்த மற்றவர்களுக்கும் சமமான பொறுப்பிருப்பதால் மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்து விட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்