இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - அடுத்தடுத்து பறந்த எச்சரிக்கை!

Update: 2024-04-19 02:41 GMT

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு - அடுத்தடுத்து பறந்த எச்சரிக்கை!

#indonesia | #thanthitv

இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங்

மலையில் உள்ள எரிமலை ஐந்து முறை வெடித்துச் சிதறியதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் 800 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். எரிமலையை சுற்றி ஆறு கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மனடோ நகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்கக்கூடிய ஆபத்தான பகுதிகளில் இருந்து சுமார் 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய நிலநடுக்கங்களால் டெக்டானிக் அடுக்குகளில் ஏற்பட்ட பாதிப்புகளே இந்த எரிமலை வெடிப்புக்கு காரணம் என்று இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்