ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

Update: 2021-04-30 13:15 GMT

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்காக அதிகரித்து 811 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் அதன் மொத்த விற்பனை, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை விட 44 சதவீதம் அதிகரித்து, 10 ஆயிரத்து 850 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக இதன் விற்பனையளவு 10 ஆயிரம் கோடி டாலர்களைத் தாண்டியுள்ளது. அத்துடன் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்