இழுபறியில் பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் - இங்கிலாந்து பிரதமர், ஐரோப்பிய யூனியன் தலைவர் இன்று பேச்சுவார்த்தை

பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஐரோப்பிய யூனியன் தலைவர் வான் டெர் லெயெனும் பெல்ஜியத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.;

Update: 2020-12-09 08:01 GMT
பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஐரோப்பிய யூனியன் தலைவர் வான் டெர் லெயெனும், பெல்ஜியத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையின்போது, இரு தரப்புக்கும் இடையே சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்து வெளியேறிய நிலையில், இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதில் சிக்கல் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்