Cambodia | உலகில் வெடிக்கும் இன்னொரு போர்... மீண்டும் மீண்டுமா... அதிர்ச்சியில் வல்லரசுகள்
கம்போடியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லை பகுதிக்கு அருகே தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை தாய்லாந்து ராணுவம் வெளியிட்டுள்ளது... அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டிய நிலையில், சர்ச்சைக்குரிய எல்லையில் பல பகுதிகளில் மோதல் வெடித்தது... கம்போடியா மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதாக தாய்லாந்து அறிவித்தது... சிசாகெட் மாகாணத்தின் ஃப்ளான் ஹின் பகுதியில் தாக்குதல் நடத்தப்படும் வீடியோ வெளியாகியுள்ளது... இந்த சூழலில் தங்கள் நாடு ஒருபோதும் வன்முறையை நாடவில்லை என தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் தங்கள் இறையாண்மை மீறப்படுவதை ஒருபோதும் தங்கள் நாடு பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.