Indonesia | Disaster | "1000 பலிகள்.." பலர் மாயம்.. இந்தோனேசியாவை சிதைத்த சூறாவளி
சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவில் மறுகட்டமைப்பு பணிகளுக்கு
27 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 950ஆக அதிகரித்துள்ளது. மேலும் 274 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆச்சே, வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மாகாணங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள நிலையில், சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.