கம்போடியா மீது தாய்லாந்து இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நிகழ்த்தி உள்ளதால் இருநாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான சண்டையில் சமீபத்தில் மத்தியஸ்தம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ள வைத்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி உள்ளன. கம்போடியா எல்லையில் தாக்குதலை விரிவுபடுத்தி வருவதாக தாய்லாந்து அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது.