"அதிபர் டிரம்ப் கடமையை செய்ய தவறிவிட்டார்" - அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடமையை அதிபர் டிரம்ப் செய்யத் தவறிவிட்டதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2020-10-09 05:48 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு பணி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கடமையை அதிபர் டிரம்ப் செய்யத் தவறிவிட்டதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார். அரிசோனா மாகாணத்தில் போனிக்ஸ் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், டிரம்ப்பின் நடவடிக்கையால் எத்தனையோ நபர்களின் கனவுகள் நசுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  அப்போது உடனிருந்த துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை குறிப்பிட்டு பேசிய அவர், கமலா தனக்கு இளம் சகோதரி போன்றவர் என பெருமிதத்துடன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்