"கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு பரப்பியது" - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸை உலகிற்கு சீனா திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-09-23 03:37 GMT
ஐநா பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2ஆம் உலகப் போருக்கு பிறகு உலக நாடுகள் மிகப்பெரிய பேரிடரை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.  சீனா, தனது  நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்து விட்டு , வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கொரோனாவை உலகிற்கு பரப்பி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி விட்டதாகவும் சாடினார். உலக சுகாதார நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து தவறான தகவல்களை சீனா வெளியிட்டதாகவும் கூறினார். சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்