ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பு - இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு

பிரிட்டனில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2020-05-11 02:51 GMT
பிரிட்டனில்  ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 31 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், லண்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர்  போரிஸ் ஜான்சன், ஊரடங்கை ஜூன் ஒன்றாம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர இது சரியான நேரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்