"மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறோம்" - இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி அறிவிப்பு

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறுவதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் தெரிவித்துள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-01-10 02:19 GMT
இங்கிலாந்து அரசு எடுக்கும் முடிவுகளில், அரச குடும்பத்தின் பங்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் தங்களின் நேரத்தை சமமாக செலவிடத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சி செய்வதில் நாங்கள் விருப்பம்  கொள்ளவில்லை என்றும்,  நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி அரச குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் மற்றும் இளவரசியின் முடிவால் அரச குடும்பம் கவலை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்