அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் : குற்றச்சாட்டை வெளியிட்டது நாடாளுமன்ற அவை நீதிக்குழு

அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை, அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு முறைப்படியாக வெளியிட்டுள்ளது.

Update: 2019-12-11 13:56 GMT
அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த்து.  இந்த நிலையில்,  அதிபர் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிடுபவர்கள்  மீது வழக்குகள் தொடுக்க வேண்டும் என உக்ரைன் நாட்டு அதிபருடன் தொலைபேசியில் பேசியதாகவும் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை  ட்ரம்ப் மறுத்துள்ள நிலையில், 6 பேர் கொண்ட நாடாளுமன்ற அவை நீதிக்குழு இந்த குற்றச்சாட்டுகளை முறைப்படி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை நடைபெற்றால், அதிபர் ட்ரம்ப்  மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரும் சிக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்