ஈரானில் கால்பந்து அரங்கில் பெண்களுக்கு அனுமதி

ஈரான் நாட்டில் கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2019-10-10 03:32 GMT
ஈரான் நாட்டில்  கால்பந்து அரங்கில் போட்டிகளை காண ஈரான் அரசு பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் போட்டிகளை நேரில் காண பெண்களுக்கு ஈரான் அரசு தடை விதித்திருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தடையை விலக்க கோரி பெண் ரசிகை ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட பிஃபா, ஈரான் அரசை கடுமையாக எச்சரித்து பெண்கள் போட்டிகளை நேரில் காண அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. தற்போது கம்போடியா - ஈரான் அணிகள் மோதும் போட்டியை காண பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது ஈரான் அரசு
Tags:    

மேலும் செய்திகள்