பாரம்பரிய ஆடை அலங்கார கண்காட்சி : ஹன்போக் உடையில் அணிவகுத்த அழகிகள்

வடகொரியாவின் பியோங்கியாங் நகரில், பாரம்பரிய ஆடை கண்காட்சி மற்றும் அலங்கார அணிவகுப்பு களைகட்டியது.

Update: 2019-09-05 03:29 GMT
வடகொரியாவின் பியோங்கியாங் நகரில், பாரம்பரிய ஆடை கண்காட்சி மற்றும் அலங்கார அணிவகுப்பு களைகட்டியது. அழகான இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள், ஹன்போக் உடை அணிந்து மேடையில் அணிவகுத்து சென்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கலாச்சார ஆடைகள், திருமண ஆடைகள், குழந்தைகளுக்கான பிரத்யேக உடைகள் என 760க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. இந்த ஆடை அலங்கார கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்