புதிய கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

இலங்கை கடற்படைக்காக, அமெரிக்க கடலோர காவல் படையிடம் இருந்து வாங்கப்பட்ட பி 626 "கஜபாஹு" என்ற கப்பலை அந்நாட்டு அதிபர் சிறிசேன நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Update: 2019-06-08 03:53 GMT
இலங்கை கடற்படைக்காக, அமெரிக்க கடலோர காவல் படையிடம் 
இருந்து வாங்கப்பட்ட பி 626  "கஜபாஹு" என்ற கப்பலை  அந்நாட்டு அதிபர்  சிறிசேன நாட்டுக்கு  அர்ப்பணித்தார். 115 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலம் கொண்ட இந்த கப்பல் ஒரு மணி நேரத்தில் 28 கடல்மைல் தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.  22 கடற்படை அதிகாரிகள் மற்றும் 111 சிப்பாய்கள் இந்த நவீன கப்பலில் பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய தொழில்நுட்ப ஆயுதங்கள், அதிநவீன தொலை தொடர்பு சாதனங்களை கொண்ட இக்கப்பல், இலங்கை கடற்படை பயன்படுத்தப்படுகின்ற மிகப் பெரிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்