ரம்ஜான் பண்டிகை : ரயில், கப்பல், படகுகளில் ஆபத்தான பயணம்

ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வங்கதேசத்தில் ஏராளமானோர், ரயில், கப்பல் மற்றும் படகுகளில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டனர்.;

Update: 2019-06-05 05:16 GMT
ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வங்கதேசத்தில் ஏராளமானோர்,  ரயில், கப்பல் மற்றும் படகுகளில் ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்டனர். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சணக்கானோர், தலைநகர் டாக்காவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்ட அவர்கள், ரயில் கூரைகளில் அபாயமான வகையில் பயணம் மேற்கொண்டனர். இதேபோல், கப்பல் மற்றும் படகுகளிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்